குமார் சங்கக்கார பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…
தனது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அவர், தனது பழைய நேர்காணல்களைக் கொண்டு, AI தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட (Doctored Videos) காணொளிகள் முதலீட்டுத் தளங்களை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.”எனது பெயரும் உருவமும் போலியான AI காணொளிகளில் பயன்படுத்தப்படுகின்றன,…
