இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலான ஐரிஸ் டெனா அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே, மற்றுமொரு ஈரானியப் போர்க்கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இந்திய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் மூலம், அண்மைய நாட்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தீவிரமான கடல்சார் சம்பவங்களுடன் ஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, சர்வதேச கடற்படை அணிவகுப்பைத் தொடர்ந்து பிராந்தியத்தில் இருந்த ஐரிஸ் லவன் என்ற ஈரானியக் கப்பலில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெப்ரவரி 28 அன்று அக்கப்பலை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த ஈரான் அவசரமாக அனுமதி கோரியிருந்தது.இதனை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, மார்ச் 1 ஆம் திகதி அனுமதியளித்ததைத் தொடர்ந்து, மார்ச் 4 ஆம் திகதி அந்தக் கப்பல் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தது. தற்போது அதிலிருந்த 183 மாலுமிகளும் கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இந்தியப் பெருங்கடலில் ஒரே காலப்பகுதியில் ஈரானின் மூன்று முக்கிய கடற்படைக் கப்பல்கள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது, மார்ச் 4 ஆம் திகதி இலங்கையின் தென் கடற்பரப்பிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ மூலம் இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.ഐറിസ് ദെന’ അമേരിക്ക തകർക്കുന്നതിന് തൊട്ടുമുമ്പ് ഇറാന്റെ മറ്റൊരു കപ്പലിന് കൊച്ചിയിൽ അഭയം നൽകി ഇന്ത്യ – Deshabhimaniஇந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மற்றுமொரு ஈரானியக் கப்பலான IRIS Bushehr தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கையிடம் உதவி கோரியது. மனிதாபிமான அடிப்படையில் இலங்கை கடற்படை அதன் ஊழியர்களை மீட்டு, கப்பலைத் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளது.தற்போது மூன்றாவது கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.ஈரானின் ஒரே தொகுதிப் பிரிவைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் – ஒன்று அமெரிக்காவால் அழிக்கப்பட்ட நிலையில், மற்றைய இரண்டும் இந்தியா மற்றும் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளமை – பிராந்திய பாதுகாப்பில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி மோதல் போக்கு, தெற்காசியக் கடற்பரப்பிற்கு நகர்ந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் புகலிடம் வழங்கியுள்ளமை சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஈரானியப் போர்க்கப்பல் இந்தியாவில் தஞ்சம்!….
