ஈரானியப் புரட்சிகரக் காவல்படை (IRGC), அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு “நீண்டகாலப் போரை” (Prolonged War) எதிர்கொள்ளத் தாம் முழுமையாகத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து ஈரானியப் புரட்சிகரக் காவல்படையின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி (Ali Mohammad Naeini) கூறுகையில்,”ஈரானின் புதிய முன்னெடுப்புகளும் ஆயுதங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த இராணுவ மோதலானது ஒரு புனிதமான மற்றும் சட்டபூர்வமான போர் ஆகும்.”ஈரான் இதுவரை எந்தவொரு மோதலிலும் பயன்படுத்தாத அதிநவீன ஆயுதங்களை இனிவரும் தாக்குதல்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஈரானின் எதிரிகள் வரும் நாட்களில் “வலிமிகுந்த அடிகளை” எதிர்பார்க்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் முன்னெடுக்கப்பட்ட 12 நாள் போருடன் ஒப்பிடுகையில், தற்போது ஈரான் இராணுவ ரீதியாகப் பல மடங்கு பலத்துடன் இருப்பதாக பிரிகேடியர் ஜெனரல் நைனி சுட்டிக்காட்டியுள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
“நீண்டகாலப் போருக்குத் தயார்; இதுவரை பயன்படுத்தாத அதிநவீன ஆயுதங்கள் களமிறக்கப்படும்” – ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை!…
