மூடும் அபாயத்தில் அதரகல்ல பிரதேச மருத்துவமனை: மருத்துவர் இன்றி தவிக்கும் மக்கள் – யானை அச்சுறுத்தலால் மேலும் அவதி!

குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பகுதியில் அமைந்துள்ள அதரகல்ல பிரதேச மருத்துவமனை, போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் தற்போது மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இந்த மருத்துவமனையில் இரண்டு தங்குமிட விடுதிகள் இருந்தபோதிலும், தற்போது நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் வெளிநோயாளிப் பிரிவு இயங்காது என அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு இரு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு மருத்துவர் மகப்பேற்று விடுமுறையில் சென்றுள்ளார். தற்போது இருக்கும்…

Read More

விஜய் – சங்கீதா விவாகரத்தில் சட்ட சிக்கலா? – மனுவில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் என்ன?…

விஜய், சங்கீதா ஆகியோர் 2021 இல் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் சங்கீதா.1999 ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து ஒருவர் மீது ஒருவர் அன்புடனும் பிரியத்துடனும் வாழ்ந்து வந்தனர்.பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, குறிப்பாக விஜயின் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா, நண்பர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் பெரும்பாலும் இணைந்து கலந்து கொள்வார்கள்.இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற…

Read More

43 வயதிலும் குறையாத வேகத்துடன் களமிறங்கும் கிரிக்கெட் வீரர்!…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2024 ஜூலை மாதம் ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சேர் ஜேம்ஸ் அண்டர்சன், தற்போது தனது 25ஆவது தொழில்முறை சீசனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த இவருக்கு, கடந்த 2025 ஏப்ரல் மாதம் ‘நைட்ஹுட்’ கௌரவம் வழங்கப்பட்டது.தற்போது 43 வயதாகும் அண்டர்சன், 2026-ஆம் ஆண்டுக்கான கவுண்டி செம்பியன்ஷிப் தொடரில் லங்காஷயர் (Lancashire) அணியின் முழுநேர தலைவராக செயல்படுவார் என்று…

Read More

நீதித்துறையில் ஊழலா? – பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய அத்தியாயம்!

இந்திய நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகக் குறிப்பிடும் அத்தியாயத்தைக் கொண்டுள்ள பாடசாலை பாடப்புத்தகத்திற்கு இந்திய உயர் நீதிமன்றம் முழுமையான தடை விதித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக இந்த திருத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் பாடப்புத்தகத்தை வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் இடம்பெற்றிருந்த சில கருத்துகளே இந்த சர்ச்சைக்குக் காரணமாகின. குறித்த பாடப்புத்தகத்தில், நீதித்துறையின் பல்வேறு மட்டங்களில் ஊழல்…

Read More

இறந்தும் ஜப்பானில் உயிர் வாழும் இலங்கையர்!…

1964 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்த போதிலும், தனது தளராத உறுதியால் உலகையே கவர்ந்த இலங்கையின் ஓட்டப்பந்தய வீரர் ரணதுங்க ஜே.கே. கருணானந்தவின் கதை, இன்றும் ஜப்பானிய பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது.இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா இதனை தெரிவித்துள்ளார்.Ranatunge Karunananda’s legacy, what cancer cannot do, and stringhopper kottu | The Morningகொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தூதுவர், கருணானந்தவின் விடாமுயற்சி மற்றும் மனதிடம் குறித்த செய்தி…

Read More

சட்டம் வேண்டாம் சாவகச்சேரியில் நிறைவேறிய தீர்மானம்!…

முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறப்படவேண்டும் என்று கோரி, சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தை அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சாவகச்சேரி நகராட்சி மன்றின் நேற்றைய மாதாந்த அமர்வின்போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது உபதவிசாளர் ஞா.கிஷோர் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்வைத்து உரையாற்றினார்.இதன்போது தேசிய மக்கள்…

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவு – மாணவர் ஒழுக்கத்தைப் பேண விசேட பாதுகாப்பு

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (26) நிறைவடையும் நிலையில், மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் பரீட்சையின் இறுதி நாளில் மாணவர்கள் மத்தியில் மோதல்கள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் இடம்பெற்றமையைச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, இம்முறை அத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.பரீட்சை முடிந்து வீடு திரும்பும் போது மாணவர்கள் எவ்விதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாதிருப்பதை உறுதி செய்யுமாறு…

Read More

ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தமை உள்ளூர் மற்றும் அண்டை அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.இந்த சந்திப்பு நேற்று ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய சில நேரங்களிலேயே இந்திய உயர்ஸ்தானிகரின் உடனான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.இந்த சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையே பரிமாறப்பட்ட கருத்துக்கள் அல்லது விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்த அதிகாரப்பூர்வத்…

Read More

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை கடும் உயர்வு!….

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது (Land Valuation Indicator – LVI) 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொழும்பு மாவட்ட நிலங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.நில மதிப்பீட்டுச் சுட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த அதிகரிப்பு காணப்படுவதுடன், குறிப்பாக குடியிருப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான…

Read More

மின்சார சபை பணியாளர்கள் இன்று அதிரடி அடையாள பணிப்புறக்கணிப்பு….

தமது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து முறையான பதில் கிடைக்காததைக் கண்டித்து, இன்று (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.இது தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட எட்டு கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே…

Read More