தாய்நாட்டின் மீதான உண்மையான பற்று பெண்களை மதிப்பதிலேயே உள்ளது – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு…

பெண்களையும் தாய்மார்களையும் மதிக்காத ஒரு சமூகம், தாய்நாட்டின் மீது உண்மையான அன்பையோ மரியாதையையோ கட்டியெழுப்ப முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாத்தளையில் நேற்று (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பெண்களின் தியாகங்கள் மற்றும் ஆசீர்வாதங்களின் மேலேயே இந்த நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் ஏற்படும் சவால்களைப் பெண்களே முதலில் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில் குடும்பச் செலவுகளை நிர்வகிப்பதில் தாய்மார்களே பெரும் சுமையைச் சுமக்கின்றனர்.உள்நாட்டுப் போரின் போது தாய்மார்கள் அனுபவித்த துயரங்களை நினைவு கூர்ந்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் இளைஞர்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்யப்பட்டதாகக் கூறினார்.ஒவ்வொரு அரசியல் கட்சியும் அரசாங்கமும் பெண்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *