105 ஆண்டு பழமையான விண்டேஜ் டிராக்டர் ரூ.1.25 கோடிக்கு விற்பனை: எப்படி சாத்தியமானது?

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்போது, எவ்வாறு வந்து சேரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கான ஒரு சுவாரஸ்யமான உதாரணம் பஞ்சாபின் Jalandhar நகரில் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக பாழடைந்த கட்டிடத்தின் முன்பு தூசியில் புதைந்து கிடந்த ஒரு பழமையான டிராக்டர் திடீரென சர்வதேச கவனத்தை ஈர்த்து, ரூ.1.25 கோடிக்கு விற்கப்பட்டு அமெரிக்காவின் California மாநிலத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்குச் சென்றுள்ளது.பகத் சிங் சௌக் அருகே கவனிக்கப்படாமல் கிடந்த இந்த 105 ஆண்டு பழமையான டிராக்டர், 1921 ஆம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட Lanz Bulldog HL-12 மாடல் ஆகும். விண்டேஜ் வாகன உலகில் தனித்துவமான இடம் பெற்றுள்ள இந்த டிராக்டர், சிங்கிள் சிலிண்டர் ஹாட்-பல்ப் எஞ்சினில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இயந்திரத்தை இயக்குவதற்கு முன்பு அதை சூடாக்க வேண்டும்; ஆனால் ஒருமுறை செயல்படுத்தப்பட்ட பிறகு, குறைந்த வேகத்திலும் வலுவான சக்தியை வழங்கக்கூடிய திறன் கொண்டது. அந்தக் காலத்தில் இது வயல் உழுதல், தண்ணீர் பம்ப் செய்தல் மற்றும் ஆலைகளை இயக்குதல் போன்ற பணிகளில் பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *