சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு கூட்டம் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆராய்வு….
சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு கூட்டம் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆராய்வு..மஜீட். ARM ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்திய குழுவின் முக்கிய கலந்துரையாடலும் சந்திப்பும் நேற்று (17) திகதி வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதி (Sports Complex) கூட்ட மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி MM. சஹ்பீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் உயர்பீட…
இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது!…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்த, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை 2.30 முதல் இந்த போர் நிறுத்தம் அமுலாகியுள்ளது.லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது அமைதிக்கான ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க” வாய்ப்பு என்று குறிப்பிட்டார்.நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா, போர்நிறுத்தத்திற்கு முன்னதாக இஸ்ரேலியப்…
மட்டக்களப்பு நாவற்குடா விபத்தில் படுகாயமடைந்த காத்தான்குடி இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு வைத்தியசாலையில் அனுமதி.!
மட்டக்களப்பு நாவற்குடா விபத்தில் படுகாயமடைந்த காத்தான்குடி இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு வைத்தியசாலையில் அனுமதி.!!இன்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதியொன்றில் தேவாலயம் அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார்சைக்கிள்களில் நாவற்குடா உள் வீதியொன்றினூடாக அதிவேகமாக பயணித்துள்ள நிலையில் அதில் ஒரு மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மதிலுடன் மோதிய நிலையில் மோட்டார்சக்கிளில்…
மின்சாரத் தேவை வீழ்ச்சி: சூரிய சக்தி மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துமாறு மின்சார சபை வேண்டுகோள்!
சித்திரை புத்தாண்டு தினமான இன்று (14.04.2026), நாட்டில் மின்சாரத்திற்கான தேவை வழக்கத்தை விட மிகக் குறைவாகக் காணப்படுவதால், தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் பொருட்டு சூரிய சக்தி மின் உற்பத்தி உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.தமது வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களில் கூரை மேல் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை கொண்டிருப்பவர்கள், இன்று பிற்பகல் 3:00 மணி வரை தமது இன்வெர்ட்டர்களை சுயமாக அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தொழிற்சாலைகள் மற்றும்…
ஹோர்முஸ் நீரிணையில் முறுக்கிக் கொள்ளும் வல்லரசுகள்: சீனக் கப்பல்களைத் தடுக்க அமெரிக்கா அதிரடி முடிவு!…
ஈரானிய எண்ணெயைக் ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இது குறித்துத் தெரிவிக்கையில்,ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் சீன டாங்கர் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தும். “அவர்களால் (சீனா) ஈரானிய எண்ணெயைப் பெற முடியாது.அவர்கள் எண்ணெய் பெறலாம், ஆனால் அது ஈரானிய எண்ணெயாக இருக்கக் கூடாது” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை…
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல்….
புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவ சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக வானவேடிக்கை மற்றும் பட்டாசு தொடர்பான நடவடிக்கைகளின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் பட்டாசு விபத்துக்களில் குறைவு காணப்பட்டதாகவும், அதேநிலையை இந்தப் பண்டிகைக் காலத்திலும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள்…
வயிறு புள்ளா போதைப்பொருள் உருண்டைகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய உகண்டா ‘கொக்கெய்ன்’ மம்மி!…..
வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று காலையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதுஉகண்டாவில் இருந்து வந்த ஒரு 47 வயசு பெண் பார்க்க ரொம்ப அமைதியா தான் வந்திருக்காங்க. ஆனா அவங்க பண்ண வேலை இருக்கே… அடேங்கப்பா! என்ன நடந்தது?♦️ரூட் மேப் – உகண்டா ➡️ தோஹா ➡️ இலங்கை (கத்தார் ஏர்வேஸ்ல கெத்தா வந்திருக்காங்க!).ஆபீசர்ஸுக்கே டவுட் – மேடத்தோட நடையைப் பார்த்தே நம்ம சுங்கத் துறை அதிகாரிகள் ‘ஏதோ இடிக்குதே’ன்னு மோப்பம்…
பாடசாலைக்குள் வைத்து பாடசாலை நேரத்தில் மதுவருந்திய மாணவர்கள் கைது.
ஹல்துமுல்ல பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய சம்பவத்துக்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததால் ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தீயத்தலாவை அடிப்படை மருத்துவமனைக்கு அவசர நிலையில் மாற்றப்பட்டார்.மருத்துவமனை தகவலின்படி, மதுபானத்தின் வாசனையை மறைக்க அவர் முதலில் அழகு சாதனப் பொருளை பயன்படுத்திய பின்னர் மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிஐ அசோக இந்துநில் ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட மாணவர்களின்…
அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்- ஈரான் தெரிவிப்பு…
அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்- ஈரான் தெரிவிப்பு🚨நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன என அமைதி பேச்சுவார்த்தை எட்டப்படாததை குறித்து ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 07ஆம் திகதி முதல் தொடங்கியது. இந்நிலையில், நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்றது. அதன்படி, நேற்று (11) அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்கியது.21 மணித்தியாலம் நீடித்த…
எரிபொருள் விலை உயர்வால் விவசாயத்துறைக்கு பாரிய அச்சுறுத்தல்..
எரிபொருள் விலையதிகரிப்பு காரணமாக நாட்டின் விவசாயத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் 80 முதல் 90 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய அறுவடை காலத்தில் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் ஏனைய விவசாய உபகரணங்களுக்கான சேவைக்கட்டணம் ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 2,000 முதல் 3,000 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு ஏக்கர் நெல் அறுவடைக்கான…
