இலவங்கப்பட்டையினால் இலங்கைக்குக் கோடிகளில் வருமானம்……

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 8 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக, இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனக லிந்தர தெரிவித்தார்.இவற்றில், இலவங்கப்பட்டை சுருள்களே அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 251 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஏனைய வருமானம் இலவங்கப்பட்டை பட்டை, இலைகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின்…

Read More

நீண்டகால குற்றத்தை காட்டிக்கொடுத்த துர்நாற்றம் – சுமார் 200 உடலங்களுடன் 4 ஆண்டுகள் வாழ்ந்த கொடூரம்!…

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் சுமார் 200 உடல்களைச் சிதையவிட்டு, முறைகேடாகக் கையாண்ட விவகாரத்தில் இறுதிச் சடங்கு இல்லத்தின் உரிமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், பென்ரோஸ் பகுதியில் ‘ரிட்டர்ன் டு நேச்சர்’ (Return to Nature) என்ற பெயரில் இறுதிச் சடங்கு இல்லத்தை ஜோன் ஹால்போர்ட் மற்றும் அவரது முன்னாள் மனைவி கேரி ஹோல்போர்ட் நடத்தி வந்தனர்.இயற்கை முறைப்படி (இரசாயனங்கள் இன்றி) உடல்களை அடக்கம் செய்வதாகக் கூறி வந்த இவர்கள், உண்மையில் உடல்களை…

Read More

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய முன்னணி உணவகங்கள்…

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய முன்னணி உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.அதன்படி, கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் மற்றும் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள முன்னணி உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Read More

பழுதடைந்த தனது வாகனத்தை விற்பனை நிலையம் முன்பாகவே தீயிட்டு எரித்த பெண்…

மத்தியப் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக வாங்கிய இ-ரிக்‌ஷா அடிக்கடி பழுதானதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அதனை விற்பனை செய்த நிறுவனத்தின் முன்னாலேயே தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தினக்கூலி வேலையிலிருந்து விடுபட்டு, சுயதொழில் மூலம் முன்னேற வேண்டும் என்ற ஒரு பெண்ணின் கனவு, வீதியில் தீக்கிரையாகி முடிவுக்கு வந்துள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சிவ்புரி, ஃபக்கர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான குடியா மஹௌர் மற்றும் அவரது கணவர் நாராயண்…

Read More

பெண்களுக்கு ஒரு நற்செய்தி! – மாதவிடாய் இரத்தத்தின் மூலம் புற்றுநோய் பரிசோதனை: மருத்துவ உலகில் புதிய புரட்சி…

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை, மிகவும் துல்லியமான மற்றும் எளிதான வழியாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போதைய சவால் என்ன?தற்போது நடைமுறையில் உள்ள ‘பாப் ஸ்மியர்’ (Pap smear) அல்லது என்.எச்.எஸ் (NHS) சோதனையில், மருத்துவர் அல்லது தாதியர் மூலம் கருப்பை வாயிலிருந்து செல்கள் சேகரிக்கப்படுகின்றன.ஆனால், வலி, கூச்சம் மற்றும் அசௌகரியம் காரணமாக மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தப் பரிசோதனைக்குச் செல்வதில்லை.குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் மற்றும் பாலியல் வன்முறையால்…

Read More

டி20 உலகக்கிண்ணம் 2026: கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

Messenger 2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நாளை (7) ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி (SSC) மைதானங்களைச் சுற்றி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.இதற்காக 1,500 காவல்துறை அதிகாரிகளும் 600 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, மைதானத்தினுள் பெரிய பைகள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள்…

Read More

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்? : குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாக மறுத்தது இந்திய உயர்ஸ்தானிகராலயம்…

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் அல்லது கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இக்குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.அத்துடன், கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.பாதுகாப்பு மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் சார்ந்து இலங்கை அரசாங்கத்துடன் தாம் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும்,…

Read More

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் 47 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதா? – காரணம் என்ன?

இலங்கையின் மொத்த அரச பாடசாலைகளின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு சிறிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.2023 ஆம் ஆண்டில் 10,096 ஆக இருந்த பாடசாலைகளின் எண்ணிக்கை, 2024 இல் 10,076 ஆகவும், 2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி 10,047 ஆகவும் குறைந்துள்ளது.இது 2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில் சுமார் 0.49 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும்.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளின் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளில் அரச பாடசாலைகளின்…

Read More

ட்ரம்ப்பை மிஞ்சிய மனைவியின் செல்வாக்கு – யாருக்கு முதலிடம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் மக்கள் செல்வாக்கு குறித்த புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வௌியாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில் இருவருக்கும் இடையிலான மக்கள் விருப்பம் மற்றும் எதிர்ப்பு நிலையில் சுவாரசியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்ட தனித்தனி கருத்துக் கணிப்புகளின்படி, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் தலா 41 வீதமான மக்கள் விருப்பம் (Favorable)…

Read More

தாய் கண்முன்னே நேர்ந்த கொடூரம் : ஒட்டுசுட்டானில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு….

Messengerமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில், குறித்த பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.குறித்த சிறுவன் தமது தாயாருடன் புல் வெட்டுவதற்காகச் சென்றபோது அந்தப் பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.சிறுவனின் உடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More