Headlines

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது….

Read More

IMF முகாமைத்துவ பணிப்பாளர் அடுத்த மாதம் இலங்கை வருகிறார்….

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் உயர்ந்தபட்ச ஒத்துழைப்புக்களை வழங்குமென அதன் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.அவர்கள் நேற்று(28) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.இலங்கைக்கு நான்காவது முறையாக வருகை தந்துள்ளதற்கமைய அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவை நேரில் கண்ட நிலையில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்…

Read More

இன்று முதல் அமுலாகும் புதிய கல்வி சீர்திருத்தம்…

2026ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான புதிய கல்வி மறுசீரமைப்​பை ந​டைமுறைப்படுத்தல் மற்றும் முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் ​தேசிய நிகழ்வு இன்று(29) நடைபெற்றது.பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.கொழும்பு மாவட்டத்தின் அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் தேசிய நிகழ்வு நடைபெற்றது.பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலீன் ஹேவகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.புதிய கல்வி மறுசீரமைப்பிற்கு…

Read More

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்க விலை : இன்று மட்டும் ரூ.15,000 அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் காரணிகளினால், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம்…

Read More

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு : ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!..

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ளல் அத்தியாவசியமான ஒரு முன்தேவை என்பதையும் தமது இயக்கம் உறுதியாக நம்புவதாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,…

Read More

ரூபாயின் பெறுமதி அதிரடி உயர்வு : அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம் என்ன?

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 36 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 417 ரூபாய் 42 சதம், விற்பனை பெறுமதி 430 ரூபாய் 31 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபாய்…

Read More

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், உத்தியோகபூர்வ பயணம் என்ற போர்வையில் தனது பாரியாரான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த பயணத்தின் ஊடாக அரசாங்கத்துக்கு 1.5 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குத்…

Read More

நிபா வைரஸ் அச்சுறுத்தல் – தீவிரமடையும் கண்காணிப்பு

மியன்மாரில் இதுவரை நிபா வைரஸ் (Nipah virus) பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படாத போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கண்காணிப்புப் பணிகளை அந்நாட்டு சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி இது தொடர்பான விசேட சுகாதார ஆலோசனைகளையும் இன்று வெளியிட்டுள்ளது. நிபா வைரஸைப் பரப்பும் முக்கிய காரணியான பழம் தின்னும் வௌவால்கள் மியன்மாரில் அதிகளவில் காணப்படுகின்றன. நிபா வைரஸ் பாதிப்பு அடிக்கடி பதிவாகும் நாடுகளுடன் மியன்மார் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், வைரஸ் ஊடுருவும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்கம்…

Read More

பிறையை தீர்மானிக்கும் இஸ்லாமிய நெறியியல்கொழும்பு பெரியபள்ளிவாசலில் மாநாடு…

பிறை தீர்மானங்களை தெளிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரியபள்ளிவாசலில் விசேட மாநாடு நடைபெற்றது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழு என்பன இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரசீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழு தலைவர் ஹிஷாம் ஃபத்தாஹி நிகழ்வில் முன்னிலை வகித்தார்.ஹாபிழ்.எம்.ஜே.எம். சப்ரி கிராஅத் ஓதியதும் நிகழ்வு ஆரம்பமானது. முஸ்லிம் சமய கலாச்சார…

Read More

USA ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ராட்சத விமான தாங்கி கப்பல் இதுதான் தற்பொழுது மேற்கத்திய ஊடகங்களில் மிக முக்கிய செய்தியாக வலம் வருகிறது.‼️

உண்மையில் இந்த போர்க்கப்பல் என்பது வலுவான போர்க்கப்பல் தான் எப்பொழுது என்றால் 1990 ஆம் ஆண்டுகளில் வளைகுடா யுத்தத்தின் பொழுதும் 2001 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தின் பொழுதும் தான். . காரணம் இந்த போர்க்கப்பல் என்பது 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகிவிட்டது.. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த போர்க்கப்பல் ஓய்வு அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக பிரித்து எடுக்கப்பட்டு விடும் என்னை பொருத்தவரை ஈரானுக்கு எதிரான ஒரு யுத்தம்…

Read More