சிறைச்சாலைகளில் நெருக்கடியை குறைக்க புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை….

COLOMBO (News1st) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.2026 ஜனவரி மாதம் அளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் இந்த மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்குகள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த…

Read More

இந்த அரசாங்கம் நாட்டு மக்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டை முன்வைத்தார்….

நமது நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று தேவையாக காணப்படுகின்றது. இதனைச் செய்வதற்கான மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கம் காணப்படுவதால், சிவில் சமூகத்தின் பல்வேறு தரப்புகள் இதற்கான முன்முயற்சியை எடுக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுத்தன. இது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் கூட உள்ளடங்கியிருப்பதால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியும். இதனை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சி தயார். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பனவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயம் சேர்க்கப்பட்டுள்ளன…

Read More

ஜோன்ஸ்டன் & அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்….

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்…

Read More

வாழைச்சேனையில் சிக்கினார் போலி மருத்துவர்…

மருத்துவர் போல வேடமணிந்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோத மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ஒருவரை வாழைச்சேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர் ஒருவர் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கிளினிக் ஒன்றை நடத்தி வந்ததாக வாழைச்சேனை காவல்நிலைய உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இவர் மருத்துவர் போன்று உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, அதனை நம்பவைத்து கடந்த மூன்று வருடங்களாக…

Read More

திறமையாளர்களை ஈர்க்க வலைவீசும் பிரித்தானியா: விசா நடைமுறைகளில் பாரிய தளர்வுகள்

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உயிரியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச நிபுணர்களை ஈர்ப்பதற்காக விசா கட்டணங்களை மீள வழங்கும் புதிய திட்டத்தை ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.செயற்கை நுண்ணறிவு, ஆழ்கடல் தொழில்நுட்பம் (Deep Tech) மற்றும் தூய எரிசக்தி…

Read More

டட்லி சிறிசேனாவின் ரோல்ஸ்–ராய்ஸ் வாகனத்தை இறக்குமதி செய்த நபர் தவறான தகவலை வழங்கியதால் 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

டட்லி சிறிசேனாவின் ரோல்ஸ்–ராய்ஸ் வாகனத்தை இறக்குமதி செய்த நபருக்கு, தவறான அறிவிப்புக்காக 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக ரூ. 370 மில்லியன் வரி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்–ராய்ஸ் வாகனம் Phantom Auto என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுங்கத் துறை விசாரணையில், அது Phantom Auto EWB (Extended Wheelbase) மாடல் என்பது உறுதி செய்யப்பட்டது என சுங்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன (EconomyNext).இங்கிலாந்தில் Phantom Auto மாடலின் அறிவிக்கப்பட்ட மதிப்பு £417,000 ஆகும்…

Read More

அதிரடி மாற்றம் : ஐரோப்பா மீதான 10% வரி விதிப்பைத் திரும்பப் பெற்றார் ட்ரம்ப்….

ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கப்பட இருந்த 10 சதவீத மேலதிக வரி திட்டத்தைக் கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முன்னதாக, கிரீன்லாந்தைக் கைப்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது 10 சதவீத மேலதிக வரி விதிப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன்படி, கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம்…

Read More

திறமையாளர்களை ஈர்க்க வலைவீசும் பிரித்தானியா: விசா நடைமுறைகளில் பாரிய தளர்வுகள்…

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உயிரியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச நிபுணர்களை ஈர்ப்பதற்காக விசா கட்டணங்களை மீள வழங்கும் புதிய திட்டத்தை ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.செயற்கை நுண்ணறிவு, ஆழ்கடல் தொழில்நுட்பம் (Deep Tech) மற்றும் தூய எரிசக்தி…

Read More

தேசிய கண் மருத்துவமனையில் இன்று 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டம்

தேசிய கண் மருத்துவமனை மருத்துவர்களினால் இன்றைய தினம் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. தேசிய கண் மருத்துவமனையின் பதில் பணிப்பாளரின் தன்னிச்சையான இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, இன்று காலை 8 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Read More

போதைப்பொருள் சோதனைகளுக்கான தகவல்களை  மக்களிடமிருந்து பெற பொலிஸ் தலைமையகம் தொலைபேசி எண்களை அறிமுகம் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் – SSP ஜே.பி.எஸ். ஜெயமஹா 071-8591327 காங்கேசன்துறை – SP எம்.ஆர். அம்பேபிட்டிய 071-8591315 கிளிநொச்சி -SSP ஜயசாந்த டி சில்வா 071-8591347 முல்லைத்தீவு SSP ரத்னவீர 071-8591374 மன்னார் SSP எரிக் ரஞ்சித் 071-8591363 வவுனியா SSP சோமரத்ன விஜேமுனி 071-8591340 மட்டக்களப்பு SSP ஜி.லலித் லீலாரத்ன 071-8591127 திருகோணமலை SSP அருணா சந்திரபால 071-8591170 அம்பாறை SSP பி.பி.கஸ்தூரி ஆராச்சி 071-8591145 கந்தளாய் SSP சஞ்சீவ பண்டார 071-8591187 கொழும்பு மத்திய SSP…

Read More