வீதியோரம் நடந்து சென்ற சிறுவர்கள் மீது பாரவூர்தி மோதி விபத்து: 13 வயது சிறுவன் பலி…
சிலாபம் – குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிங்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (01) பிற்பகல் சிலாபம் நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பகுதியைச்…
