அமெரிக்காவில் இதுவரை வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், குறிப்பிட்ட சில துறைகளில் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் வேகம் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.இந்த ஆய்வானது “அவதானிக்கப்பட்ட வெளிப்பாடு” என்ற புதிய அளவீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.இது AI-இன் தத்துவார்த்தத் திறனை (Theoretical capability) மட்டும் கணக்கில் கொள்ளாமல், நிஜ உலகில் அலுவலகப் பணிகளில் AI எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற தரவுகளையும் இணைத்து மதிப்பீடு செய்கின்றது.இந்த அளவீட்டின்படி, குறிப்பிட்ட சில பணிகளில் AI-இன் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதன்படி Computer Programmers, வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் (Customer Service Reps),தரவு உள்ளீட்டாளர்கள் (Data Entry Keyers), நிதி ஆய்வாளர்கள் (Financial Analysts) மற்றும் அலுவலகம் சார்ந்த ஏனைய பணிகளிலும் AI அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சுமார் 30% தொழிலாளர்கள் AI-இன் எந்தவொரு தாக்கமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.குறிப்பாக சமையல் கலைஞர்கள் (Cooks),வாகன திருத்துநர்கள் (Mechanics), உயிர்காப்பு பணியாளர்கள் (Lifeguards),மதுபான விடுதி ஊழியர்கள் (Bartenders) போன்ற நேரடி உடல் உழைப்பு மற்றும் மனிதர்களுடனான நேரடித் தொடர்பு தேவைப்படும் பணிகளில் AI-இன் தாக்கம் பூஜ்ஜியமாக உள்ளது.கோட்பாட்டு ரீதியாக AI பல பணிகளைச் செய்யக்கூடியதாக இருந்தாலும், சட்டச் சிக்கல்கள், மென்பொருள் தேவைகள் மற்றும் மனித மேற்பார்வை போன்ற காரணங்களால் நடைமுறையில் அதன் பயன்பாடு இன்னும் முழுமையை எட்டவில்லை.இருப்பினும், அனுபவம் குறைந்த இளைய தலைமுறை ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகளில் ஒரு மந்தநிலை நிலவுவதை இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
AI-ஆல் வேலைக்கு ஆபத்தா? தப்பிக்கும் 30% தொழிலாளர்கள் யார்? – ஆய்வில் தகவல்..
