Win Tv

வீதியோரம் நடந்து சென்ற சிறுவர்கள் மீது பாரவூர்தி மோதி விபத்து: 13 வயது சிறுவன் பலி…

சிலாபம் – குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிங்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (01) பிற்பகல் சிலாபம் நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பகுதியைச்…

Read More

கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு…

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.தர்மபுரத்திலிருந்து பயணித்த டிப்பரை புளியம்பொக்கணை வீதித்தடைக்கருகே நிறுத்துமாறு சமிக்ஞை காட்டிய போதும் கட்டளையை மீறி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச்சூட்டில் டிப்பரின் பின்புற டயர்களுக்கு சேதமேற்பட்ட போதும் சுமார் 02 கிலோமீட்டர் வரை சாரதி டிப்பரை நிறுத்தாது செலுத்தப்பட்டுள்ளது.டிப்பரை துரத்திச்சென்ற பொலிஸார் கண்டாவளை பகுதியில் டிப்பர் வாகனத்தை கைப்பற்றிய போதும், சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.குறித்த டிப்பரில் அனுமதிப்பத்திரமற்ற நிலையில் 03 கியூப்…

Read More

கொட்டும் மழையிலும் யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம்…

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.அந்தவகையில் இன்று (01) காலை கொட்டும் மழைக்கு மத்தியிலும் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.தையிட்டி தொடர்பில் அநுரவின் மாறுபட்ட கருத்து! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டுதையிட்டி தொடர்பில் அநுரவின் மாறுபட்ட கருத்து! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டுகுவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்இந்தப் போராட்டத்தில்…

Read More

காலி – பெந்தர பகுதியில் 70 மில்லியன் ரூபாய் பெறுதியான ஹெராயினுடன் இருவர் கைது…

70 மில்லியன் ரூபாய்க்கும் அதிக சந்தை மதிப்புள்ள 5 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் காலி, பெந்தர பகுதியில் போதைப்பொருளை விநியோகிக்க முயன்றபோது, ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையை காவல்துறை முன்னெடுத்திருந்தது. கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படாது : 15,000 பணியாளர்கள் வேறு துறைகளுக்கு மாற்றம்!

இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 15,000 பணியாளர்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காவல்துறை திணைக்களங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இந்தத் திணைக்களம் கலைக்கப்பட மாட்டாது எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார். திணைக்களத்தின் மொத்தமுள்ள 32,000 பணியாளர்களில் சுமார் பாதிப் பேர் தற்போது புதிய கடமைகளுக்காக மாற்றப்படுகின்றனர். 5,000 அதிகாரிகள் வன உத்தியோகத்தர்களாக மாற்றப்படுவர். இது நாட்டில் அதிகரித்து வரும் மனித-யானை மோதல்களைக் கட்டுப்படுத்தவும், இயற்கை வளங்களைப்…

Read More

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சஜித் வருகை…

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தொடங்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் இடத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை வருகை தந்துள்ளார்.7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தில், இப்…

Read More

குடும்பத்தை இழந்த தனுஷ்கவுக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து…

கனடா, ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையரான தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தை மற்றும் சகோதரருக்குக் கனடா அரசாங்கம் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது.2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனுஷ்கவின் மனைவி தர்ஷனி அவர்களது பிள்ளைகளான இனுக்க அஸ்வினி, 3வயதான ரனாயா, 2 வயதான கெல்லி மற்றும் அவர்களது குடும்ப நண்பர் காமினி அமரகோன் ஆகியோர் ஒட்டாவாவில் உள்ள அவர்களது இல்லத்திலேயே கொடூரமான…

Read More

டிரம்ப் போரைத் தொடங்குவாரா அல்லது ஒப்பந்தம் செய்வாரா? – என்ற குழப்பத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள்!‼️

ஈரான் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்த நேற்றிரவு ஆலோசனையைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு இன்று மதியமும் மற்றொரு பாதுகாப்பு ஆலோசனையை நடத்தினார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இன்னும் உறுதியான ஒன்றாக (Done deal) மாறவில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கருதுகின்றனர்.​அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அழுத்தத்தின் மூலம் ஒரு உடன்படிக்கையை எட்ட முயற்சிக்கும் “துப்பாக்கிப் படகு இராஜதந்திரத்தை” (Gunboat diplomacy) கடைப்பிடிக்கலாம் என்பதை ஜெருசலேம் (இஸ்ரேல்) நிராகரிக்கவில்லை. அதிகமான இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிப்பது என்னவென்றால்,​”ஆயதுல்லா…

Read More

திருமதி உலக அழகு இராணிப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பிடித்த இலங்கையின் சபீனா யூசுப்…

2025 திருமதி உலக அழகு இராணிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். திருமதி உலக அழகு இராணிப் போட்டியின் இறுதிக் கட்டம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது.உலகின் மிகவும் பிரபல்யமான, நீண்ட காலமாக நடைபெற்று வரும் சர்வதேச அழகு இராணிப் போட்டி இதுவாகும்.இந்த போட்டியில் 60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசுப் களமிறங்கினார். திருமதி உலக அழகு இராணிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த சனீதா சீடாகெத்…

Read More

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பாவிக்க தடை…

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களின் பாவனையை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.இது தொடர்பாக சிறுவர் உள நல விசேட வைத்தியர்கள் ஊடாக அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தடையை அமுல்படுத்த முன்னர் பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவும் சமூக ஊடகத் தடைகள் விதிக்கப்பட…

Read More