பழுதடைந்த தனது வாகனத்தை விற்பனை நிலையம் முன்பாகவே தீயிட்டு எரித்த பெண்…
மத்தியப் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக வாங்கிய இ-ரிக்ஷா அடிக்கடி பழுதானதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அதனை விற்பனை செய்த நிறுவனத்தின் முன்னாலேயே தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தினக்கூலி வேலையிலிருந்து விடுபட்டு, சுயதொழில் மூலம் முன்னேற வேண்டும் என்ற ஒரு பெண்ணின் கனவு, வீதியில் தீக்கிரையாகி முடிவுக்கு வந்துள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சிவ்புரி, ஃபக்கர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான குடியா மஹௌர் மற்றும் அவரது கணவர் நாராயண்…
