Win Tv

வானில் தோன்றும் நெருப்பு வளையக் காட்சி! – 2% மக்களுக்கு மட்டுமே கிடைக்கும் அதிர்ஷ்டம்…..

2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய சூரிய கிரகணம்’ (Annular Solar Eclipse) ஆகும்.சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் மற்றும் கோணங்களின் அடிப்படையில், சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்காமல், அதன் விளிம்புகள் ஒரு பிரகாசமான மோதிரம் போலத் தெரிவதால் இது “நெருப்பு வளையக் கிரகணம்” (Ring of Fire) என்று அழைக்கப்படுகிறது.அண்டார்டிகாவின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே இந்த முழுமையான வளையக் காட்சியைக் காண முடியும்.மேலும் ஆப்பிரிக்காவின்…

Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

அரசாங்கம்,மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, தனது தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.23,000க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தச் சங்கம், சுகாதாரத் துறையில் நிலவும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.2025 டிசம்பரில் சுகாதார அமைச்சரால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமை.மருத்துவமனைகளில் நிலவும் மனிதவளத் தட்டுப்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளின்மை மற்றும் உபகரணப் பற்றாக்குறை.வேதனப் பிரச்சினைகள் மற்றும் கொடுப்பனவு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டமை…

Read More

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு விஜயம் – 19ஆம் திகதி விசேட உரை!….

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், ஜனாதிபதி எதிர்வரும் 19ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்.இந்திய பிரதமரின் தலைமையில் 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் 20 நாடுகளின் அரச…

Read More

சந்தையில் மீன்களின் விலைகள் வீழ்ச்சி….

கடந்த சில நாட்களாக சந்தையில் அதிகரித்திருந்த மீன்களின் விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், மீன்களைக் கொள்வனவு செய்வதற்காக வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.இது தொடர்பாக பேலியகொட மீன் சந்தையின் தலைவர் ஜயந்த குரே கருத்துத் தெரிவித்திருந்தார்.மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டங்கள் காரணமாகவே கடந்த காலங்களில் சந்தையில் மீன்களின் விலைகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் திடுக்கிடும் தகவல்

கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, ‘ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த’ எனப்படும் ‘புளூமெண்டல் சங்க’ என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உந்துருளியில் வந்த சந்தேகநபர்கள் டி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சிகையலங்கார நிலையம் ஒன்றை இலக்கு வைத்தே…

Read More

சாதாரண தரப் பரீட்சார்த்திகள் கவனத்திற்கு!

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் மழை பெய்யலாம் என்பதால், அபாய நிலையிலுள்ள பாடசாலைகள் குறித்த தகவல்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.மோசமான வானிலை காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.அதன்படி, பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத்…

Read More

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது….

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4 இலட்சத்த ஆயிரத்து 787 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை பெப்ரவரி 12 ஆம் திகதி வருகை தந்துள்ளனர்.அதன்படி குறித்த திகதியில் 12 ஆயிரத்து 731…

Read More

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கியூபாவின் புகழ்பெற்ற ‘சிகர் திருவிழா’ ஒத்திவைப்பு…

அமெரிக்காவின் கடுமையான எரிபொருள் முடக்கல் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற ‘ஹபானோ சிகர் திருவிழா’ (Festival del Habano) காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பெப்ரவரி மாத இறுதியில் ஐந்து நாட்கள் நடைபெறவிருந்த இந்தச் சர்வதேசத் திருவிழா, கியூபா எதிர்கொண்டுள்ள “சிக்கலான பொருளாதாரச் சூழல்” காரணமாக நிறுத்தப்படுவதாக விழா ஏற்பாட்டுக் குழு சனிக்கிழமை அறிவித்தது.கியூபாவின் நீண்டகால நட்பு நாடான வெனிசுவேலாவிலிருந்து வரும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதால், குறித்த நாடு முழுவதும் கடுமையான…

Read More

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை….

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதன்படி, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.மேலும், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.அத்தோடு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி,…

Read More

உரிமையாளருக்காக 10 வருடம் கல்லறையில் காத்திருந்த நாய் – நாயின் அன்பு உருவாக்கிய புதிய சட்டம்….

பிரேசிலில் தனது உரிமையாளரின் கல்லறையிலேயே 10 வருடங்களாக வாழ்ந்து வந்த ‘பொப்’ (Bob) என்ற நாயின் விசுவாசத்தால் கவரப்பட்ட அந்நாட்டு அரசாங்கம், செல்லப் பிராணிகளை உரிமையாளர்களின் குடும்பக் கல்லறைகளிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.பிரேசிலின் சாவ் பாலோ (São Paulo) மாகாணத்தில் தனது உரிமையாளர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே 10 வருடங்களாக வாழ்ந்து வந்த ‘பொப்’ என்ற நாயின் நினைவாகப் பெயரிடப்பட்ட புதிய சட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.உரிமையாளரின் இறுதிச் சடங்கின்…

Read More