Win Tv

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவு – மாணவர் ஒழுக்கத்தைப் பேண விசேட பாதுகாப்பு

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (26) நிறைவடையும் நிலையில், மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் பரீட்சையின் இறுதி நாளில் மாணவர்கள் மத்தியில் மோதல்கள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் இடம்பெற்றமையைச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, இம்முறை அத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.பரீட்சை முடிந்து வீடு திரும்பும் போது மாணவர்கள் எவ்விதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாதிருப்பதை உறுதி செய்யுமாறு…

Read More

ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தமை உள்ளூர் மற்றும் அண்டை அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.இந்த சந்திப்பு நேற்று ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய சில நேரங்களிலேயே இந்திய உயர்ஸ்தானிகரின் உடனான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.இந்த சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையே பரிமாறப்பட்ட கருத்துக்கள் அல்லது விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்த அதிகாரப்பூர்வத்…

Read More

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை கடும் உயர்வு!….

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது (Land Valuation Indicator – LVI) 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொழும்பு மாவட்ட நிலங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.நில மதிப்பீட்டுச் சுட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த அதிகரிப்பு காணப்படுவதுடன், குறிப்பாக குடியிருப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான…

Read More

மின்சார சபை பணியாளர்கள் இன்று அதிரடி அடையாள பணிப்புறக்கணிப்பு….

தமது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து முறையான பதில் கிடைக்காததைக் கண்டித்து, இன்று (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.இது தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட எட்டு கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே…

Read More

கியூப படையினர் அமெரிக்கப் படகு மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி!…

கியூபா கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கப் படகு மீது கியூபா பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தால் அமெரிக்கா மற்றும் கியூபா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.கியூபாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘காயோ பால்கோன்ஸ்’ (Cayo Falcones) தீவு அருகே புதன்கிழமை காலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.புளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்று கியூபா எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனை இடைமறிக்க முயன்றுள்ளனர்.கியூபா உள்நாட்டு…

Read More

அவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் தள்ளுபடி: ஆயுதக் களஞ்சியங்களை அகற்றும் வழக்கில் உத்தரவு…

அவன்கார்ட் நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.அவன்கார்ட் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என அறிவித்து, அதனை ரத்து செய்யுமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

Read More

அமெரிக்காவின் அதிரடி வரி மாற்றம்: உலக வர்த்தகத்தில் குழப்பம்

அமெரிக்கா செவ்வாய்க்கிழமை முதல் 10 சதவீத புதிய உலகளாவிய இறக்குமதி வரியை (Global Import Tariff) தற்காலிகமாக வசூலிக்கத் ஆரம்பித்துள்ளது.எனினும், இந்த வரி வீதத்தை 15 சதவீதமாக உயர்த்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதால், சர்வதேச வர்த்தகர்களிடையே பெரும் குழப்பம் நிலவுவதாக ரொயிட்டர்ஸ் செய்திய வெளியிட்டுள்ளது.கடந்த வாரம் அமெரிக்க உயர் நீதிமன்றம், ட்ரம்ப் நிர்வாகம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதித்திருந்த வரிகளை இரத்துச் செய்தது.இதனைத் தொடர்ந்து, 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 10 சதவீத வரியை விதிக்கும்…

Read More

வரி செலுத்துவோரை கௌரவிக்க புதிய சலுகை அட்டைத் திட்டம் : உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகம்!

பொறுப்புள்ள பிரஜைகளாக முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவிப்பதற்கும் அவர்களைக் கௌரவிப்பதற்குமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட ‘சலுகை அட்டை’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் வரி செலுத்தும் பிரஜைகளுக்கு உபகாரமாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.சலுகை அட்டையைப் பெறுவதற்கான தகுதிகள்பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தனிநபர் வரி செலுத்துவோர் மட்டுமே இந்த அட்டையைப் பெறத் தகுதியுடையவர் ஆவர்.முந்தைய மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தொகையை முழுமையாகவோ அல்லது மேலதிகமாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும்.வருமான வரி அறிக்கையை குறித்த ஆண்டின்…

Read More

மெக்சிகோவில் போதைப்பொருள் குழுவின் அட்டூழியம்: 23 கைதிகள் தப்பியோட்டம்..

மெக்சிகோவின் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் கார்டெல்’ அமைப்பின் தலைவர், படையினரால் கொல்லப்பட்டமைக்கு எதிராக பழிவாங்கல் வன்முறைகள் தொடர்கின்றன.நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் (எ) “எல் மென்சோ”, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதற்குப் பழிவாங்கும் விதமாக அந்த அமைப்பினர் நடத்திய தொடர் தாக்குதல்களில், புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) சிறையிலிருந்து 23 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.ஆயுதம் ஏந்திய குழு ஒன்று, வாகனம் ஒன்றினால், சிறை வாசலை மோதித் தகர்த்து 23 கைதிகள் தப்பிச் செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.தப்பியோடியவர்களைப் பிடிக்க காவல்துறையினர்…

Read More

முக்கிய திருப்பங்களுக்காக, இன்று முதல் ஆரம்பமாகும் ‘துடுப்பாட்டப் போர்’ – யாருக்கு அந்த இடம்?

ஐசிசி டி20 உலகக்கிண்ணத் தொடரின் ‘சுப்பர் 8’ சுற்றில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹரி புரூக்கின் அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து பெற்ற இந்த வெற்றி, குழு இரண்டில் உள்ள மற்ற அணிகளின் அரையிறுதி வாய்ப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி, தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.எனினும், பாகிஸ்தான் அணி…

Read More