(முஹம்மது ஜிப்ரான்)
மூதூர் பகுதியில் பாரிய பஸ் விபத்து – 23பேர் காயம், உயிரிழப்பு இல்லை(முஹம்மது ஜிப்ரான்)மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கை பகுதியில் இன்று (22) புதன்கிழமை பாரிய பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.திருகோணமலையிலிருந்து மூதூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ், திருமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதி ஓரமாக இருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து நேரத்தில் பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேர் காயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த விபத்தினால் திருமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் ஒரு காலப்பகுதிக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பின்னர் சீரான நிலைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
