மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு..(முஹம்மது ஜிப்ரான்)

மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு..(முஹம்மது ஜிப்ரான்)மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பாலத்தடிச்சேனை பகுதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை 75 வயதுடைய சிவலிங்கம் செல்லமாணிக்கம் என்ற பெண் உயிரிழந்துள்ளார்.இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் மாலை நேரத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அதன் போது, குறித்த பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.இதையடுத்து, குடும்பத்தினர் மூதூர் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக மூதூர் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.பின்னர், மூதூர் நீதவான் நீதிபதியின் உத்தரவின்படி மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி முஹம்மது யூசுப் முகம்மது லாபிர் மற்றும் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.விசாரணைகளின் அடிப்படையில், அதிக வெப்பநிலை காரணமாக வெயிலில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.மேலும், இதற்கு முன்பும் அவருக்கு ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *