மூதூரில் இளைஞர்களுக்கான நீச்சல் பயிற்சி – முதல்நாள் சிறப்பாக நிறைவு….

மூதூரில் இளைஞர்களுக்கான நீச்சல் பயிற்சி – முதல்நாள் சிறப்பாக நிறைவு.(முஹம்மது ஜிப்ரான்)மூதூர் பகுதியில் அண்மைக் காலமாக இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகக் காணப்படுகிறது. இந்த உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்கான நீச்சல் பயிற்சி நிகழ்ச்சி இன்று (18) சனிக்கிழமை பக்ரியா நகர் கடற்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.மூதூர் சமூக நலன் விரும்பிகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நீச்சல் பயிற்சி, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட சூழலில் நடைப்பெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு அடிப்படை நீச்சல் திறன்கள் மட்டுமல்லாமல், நீரில் பாதுகாப்பாக நடந்து கொள்வது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.முதல்நாளிலேயே அதிகளவான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்கள், இந்த பயிற்சி தங்களின் நீச்சல் திறனை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் உயிர் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவும் என கருத்து தெரிவித்தனர்.இத்தகைய பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென பொதுமக்களும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *