1964 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்த போதிலும், தனது தளராத உறுதியால் உலகையே கவர்ந்த இலங்கையின் ஓட்டப்பந்தய வீரர் ரணதுங்க ஜே.கே. கருணானந்தவின் கதை, இன்றும் ஜப்பானிய பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது.இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா இதனை தெரிவித்துள்ளார்.Ranatunge Karunananda’s legacy, what cancer cannot do, and stringhopper kottu | The Morningகொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தூதுவர், கருணானந்தவின் விடாமுயற்சி மற்றும் மனதிடம் குறித்த செய்தி இன்றும் ஜப்பானிய மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார்.1970களில் ஜப்பானிய ஆரம்பப் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற இந்தக் கதை, தற்போது உயர்நிலைப் பாடசாலை ஆங்கிலக் கல்விப் புத்தகங்களிளும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 67ஆம் இலக்க சீருடையுடன் பங்கேற்ற கருணானந்த, கடுமையான சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்தார்.Ranatunge Karunananda: Most courageous and spirited loser at 1964 Tokyo Olympics- By Rear Admiral Dr Shemal Fernando PhD எனினும், தனது நாட்டுக்காகப் பந்தயத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஏனைய வீரர்கள் ஓடி முடித்த பின்னரும் தனி ஆளாக மூன்று சுற்றுகள் ஓடினார்.ஆரம்பத்தில் இதைக் கண்டு வியந்த 70,000 பார்வையாளர்கள், பின்னர் அவரது அர்ப்பணிப்பைக் கண்டு எழுந்து நின்று கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர்.”நான் இந்தப் போட்டியில் வெற்றி பெறவில்லை, ஆனால் ஒருபோதும் பாதியில் கைவிடவில்லை என்று ஒருநாள் எனது மகளிடம் கூறுவேன்” எனப் போட்டியின் பின் கருணானந்த நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.Karunananda of Sri Lanka: The Courageous Loser Who Won Hearts at the 1964 Tokyo Olympics | JAPAN Forwardஇதனைச் சுட்டிக்காட்டிய தூதுவர், அடுத்த நாள் ஜப்பானிய ஊடகங்கள் “வெற்றியாளருக்கு வாழ்த்துகள், கடைசி வீரருக்குப் பெருமை” எனத் தலைப்பிட்டு அவரைக் கௌரவித்ததை நினைவு கூர்ந்தார்.”கருணானந்த இன்றும் ஜப்பானில் ஓடிக்கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்த தூதுவர் இசொமாடா, இந்த நிகழ்வுக்கு வந்திருந்த கருணானந்தவின் மகன் மற்றும் பேரனுக்கு கௌரவத்தை வழங்கினார்.
இறந்தும் ஜப்பானில் உயிர் வாழும் இலங்கையர்!…
