நமது நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று தேவையாக காணப்படுகின்றது. இதனைச் செய்வதற்கான மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கம் காணப்படுவதால், சிவில் சமூகத்தின் பல்வேறு தரப்புகள் இதற்கான முன்முயற்சியை எடுக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுத்தன. இது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் கூட உள்ளடங்கியிருப்பதால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியும். இதனை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சி தயார். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பனவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயம் சேர்க்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.கொழும்பு ஜானகி ஹோட்டலில் புதன்கிழமை (21) அன்று நடைபெற்ற One Text Initiative பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் நாட்டு மக்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டை முன்வைத்தார்….
