நியூயோர்க்கில் எயார் கனடா வானூர்தி விபத்து: வானூர்தி சேவைகள் ரத்து…

நியூயோர்க்கின் லாகார்டியா வானூர்தி நிலையத்தில் நேற்று(22) இரவு மாண்ட்ரியலில் இருந்து புறப்பட்ட எயார் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express) வானூர்தி ஒன்று ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.ஜாஸ் ஏர்லைன்ஸ் (Jazz Aviation) நிறுவனத்தால் இயக்கப்படும் போம்பார்டியர் CRJ-900 ரகத்தைச் சேர்ந்த இந்த வானூர்தி, ஓடுபாதை 4இல் (Runway 4) தரையிறங்கிய போது சுமார் 39 கி.மீ வேகத்தில் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்துடன் (Truck 1) மோதியுள்ளது.இந்தக் கோர விபத்தில் தீயணைப்பு வாகனத்தில்…

Read More

“ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு!” – கமேனியின் ஆவேசமான அறிக்கை..

ஈரானின் முக்கிய பாதுகாப்புப் படைத் தலைவரான அலி லாரிஜானி படுகொலை செய்யப்பட்டதை அந்தநாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்திய நிலையில், ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி இது குறித்து முதல்முறையாக பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில், லாரிஜானியின் மரணம் குறித்து குறிப்பிட்டுள்ள மொஜ்தபா கமேனி, “லாரிஜானி ஒரு அறிவார்ந்த, அர்ப்பணிப்புள்ள மற்றும் ஈரானின் அரசியல் கட்டமைப்பில் மிகவும் மதிக்கப்படக்கூடிய ஒரு ஆளுமை. அவரது மறைவுச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன்…

Read More

செயற்கை நுண்ணறிவு மூலம் முன்னோர்களை உயிர்ப்பிக்கும் கலைஞர்!..

“ஒரு முதியவர் இறக்கும் போது, ஒரு நூலகமே எரிந்து சாம்பலாகிறது” என்ற ஆபிரிக்கப் பழமொழியை அடிப்படையாகக் கொண்டு, நைஜீரியக் கலைஞர் மாலிக் அபெக்புவா ஒரு புரட்சிகரமான முயற்சியில் இறங்கியுள்ளார்.செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆபிரிக்காவின் இழந்த வரலாற்றை மீட்டெடுப்பதே இவரது இலக்காகும்.மாலிக் அபெக்புவா தொடங்கியுள்ள ‘லெகசி லிங்க்’ திட்டத்தின் மூலம், ஆபிரிக்க முதியவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், கதைகள் மற்றும் அவர்களின் குடும்பப் பாரம்பரியப் பொருட்கள் (முகமூடிகள், மேளங்கள் போன்றவை) டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்படுகின்றன.இதன் மூலம், முதியவர்களின் ‘டிஜிட்டல் இரட்டையர்கள்’…

Read More

புத்தாண்டு காலத்தில் மின்தடை? ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு…

இலங்கையின் தற்போதைய எரிசக்தி சவால்களை முறியடிக்க ரஷ்யாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.உலகளாவிய ரீதியில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அரசின் திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.தற்போது நிலவும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை நிர்வகிக்கும் நோக்கில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும்…

Read More

96 மில்லியன் ரூபா நலன்புரித் திட்டம் இதோ!…

நடப்பாண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதற்கு முன்னர் பணியகத்தில் பதிவு செய்யும் போது வழங்கப்படும் இலவச காப்புறுதித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் இதுவரை 116 தொழிலாளர்களுக்கு 39.76 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5,774 பிள்ளைகளுக்கு 55.63…

Read More

எரிபொருள் விநியோகத்தைப் பலப்படுத்த ரஷ்யாவுடன் இலங்கை அவசரப் பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.தஹாகர்யனை நேற்று (13) வெளிவிவகார அமைச்சில் சந்தித்து இது குறித்து அவசர ஆலோசனைகளை நடத்தினார்.ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ள…

Read More

“நகை, பணத்தைப் பாதுகாப்பாக வையுங்கள்” – உரிமையாளர்களுக்குப் காவல்துறை அறிவுறுத்தல்!…

நாட்டில் அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குப் காவல்துறையினர் அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள், அந்த வீடுகளில் உள்ள தங்க நகைகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்வதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகப் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முகவர் நிலையங்கள் அல்லது இடைத்தரகர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ வேலைக்குச் சேரும் நபர்கள், பின்னர் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது விசாரணைகளில்…

Read More

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!….

புத்தல பகுதியில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் பயிற்சி ஓட்டத்தின் போது 15 வயதுடைய மாணவன் ஒருவன் திடீரென உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய மருத்துவமனையின் விளையாட்டுதுறைசார் மருத்துவர் ருவன் ஜயசூரிய, இந்த முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்அதன்படி, எந்தவொரு விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்பதற்கு முன்னதாக, மாணவர்கள் தங்களின் உடல் தகுதியை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.போட்டி நடைபெறுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவேனும் முறையான…

Read More

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!..

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.இதன்படி, இன்று (12) மற்றும் நாளை (13) கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள…

Read More

எரிபொருள் விலை குறையும் – வெளியான அதிரடித் தகவல்!..

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை காரணமாக நீண்ட கால அடிப்படையில் எரிபொருள் விலை குறையும் என்று அமெரிக்க ஜனாதிபதியின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.சமீபகாலமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு தற்காலிகமானது என்று குறிப்பிட்ட லீவிட், இந்த இராணுவ நடவடிக்கையின் முடிவில் நீண்ட கால அடிப்படையில் எரிபொருள் விலைகள் குறையும் என்று விளக்கமளித்தார்.உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைத்திருக்குமாறு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவைத்…

Read More