வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்
நாட்டில் முதல் தடவையாக வங்கி அட்டைகள் ஊடாக பஸ் கட்டணம் செலுத்தும் வசதி இன்று(24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தில் சுமார் 20 வழித்தடங்களில் பஸ் கட்டணத்தை வங்கி அட்டைகள் ஊடாக செலுத்த முடியும் என டிஜிட்டல், பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார். மாகும்புரவிலிருந்து காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கும் கொழும்பிலிருந்து அம்பாறைக்கும் கடவத்தையிலிருந்து பொரளைக்கும் மொனராகலையிலிருந்து பிபிலைக்கும் பதுளையிலிருந்து பண்டாரவளைக்கும் பதுளையிலிருந்து மஹியங்கனைக்குமான வழித்தடங்களில் பயணிக்கும் பஸ்களில் இந்த வசதியைப் பயன்படுத்த…
