Win Tv

செயற்கை நுண்ணறிவால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விழுந்த பேரடி…

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, இந்தியாவின் முன்னனி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் பங்குச் சந்தை பெறுமதி பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.நிஃப்டி ஐடி பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. தற்போது பயன்பாட்டிலுள்ள கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் தமது பணிகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.இதனால், ஏற்கனவே மனிதர்களால் முன்னெடுக்கப்பட்ட பல தொழில்நுட்ப வேலைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இவ்வாண்டில்…

Read More

இராஜகிரியவில் இளைஞன் மீது மண்வெட்டித் தாக்குதல்..

கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில், வெலிக்கடை காவல் நிலையத்தில் கடந்த 09 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சம்பவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read More

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி…

வட்ஸ்அப் நிறுவனம் தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில், மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக இணைய உலாவிகள் (Browsers) வழியாக குரல் மற்றும் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுவரை கணினி செயலிகளில் (Desktop App) மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த அம்சம், தற்போது பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விண்டோஸ் அல்லது மெக் செயலிகளைப் பயன்படுத்தாத லினக்ஸ் போன்ற இயங்குதளப் பயனர்களும், உலாவிகள் மூலமாகவே தடையின்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்…

Read More

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் AI காணொளியை பதிவிட்டால் இது கட்டாயம் – மீறினால் கடும் நடவடிக்கை…

இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கங்களுக்கான விதிகளை இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அண்மையில் மாற்றியமைத்துள்ளது. இணையப் பயன்பாட்டில் டீப்ஃபேக் மற்றும் ஏனைய முறைகேடுகளைத் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.புதிய விதிகளின்படி, அதிகாரிகளால் சட்டவிரோதம் என அடையாளம் காணப்பட்டு அகற்றக் கோரப்படும் உள்ளடக்கங்களை வெறும் 3 மணிநேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் நீக்க வேண்டும்.இதற்கு முன்னர் இந்த நடவடிக்கைக்கு 36 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான…

Read More

சந்தையில் எகிறியது மீன்களின் விலை!….

கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கடந்த 8 நாட்களாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இந்தநிலையில், சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இதன் விளைவாக மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதற்கமைய, பேலியகொடை மீன் சந்தையில் தோரா மீன் மூவாயிரத்து…

Read More

மின்சார வாகன உலகில் ஜாகுவாரின் மாபெரும் பாய்ச்சல் – 700 கி.மீ மைலேஜ் தரும் புதிய சொகுசு சிற்றூந்து…

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) வாகனங்களை, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள புதிய தொழிற்சாலையில் நேற்று (பிப்ரவரி 9) முதல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.சுமார் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமைத் தொழிற்சாலை (Greenfield Plant), வருடத்திற்கு 2.5 இலட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.இந்தத் தொழிற்சாலையிலிருந்து முதன்முதலாக Range Rover Evoque சிற்றூந்து இன்று வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது….

Read More

பாலில் சலவைத்தூள் கலந்து கலப்படம்…

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரசாயனங்களை கலந்து இரகசியமாக ‘செயற்கை பால்’ தயாரித்து வந்த தொழிற்சாலையை குஜராத் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கலப்பட பால் தயாரிக்கப்பட்டு அருகில் உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைக்குழு இன்று (08) சோதனை நடத்தியது.மிகக் குறைந்த அளவு பாலுடன் யூரியா மற்றும் பதப்படுத்தப்பட்ட பொடிகளைக் கலந்து இந்த போலி பால் தயாரிக்கப்பட்டுள்ளது.பாலின் நிறம்,…

Read More

வடக்கு, கிழக்கு மக்களில் அக்கறை செலுத்தும் நாமல்…

வடக்கு, கிழக்கு மக்களுக்காக, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிக்கின்றார்.கம்பஹா – திஹாரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.மாகாண சபை தேர்தலை நடத்தி, வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க, அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச இதன்போது கூறியுள்ளார்.இந்தநிலையில் நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக…

Read More

இன்று முதல் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழையுடனான வானிலை இன்று (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாகக் குறையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.எதிர்வரும் நாட்களில் ஊவா மாகாணம், மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.மத்திய மலைநாட்டின்…

Read More

டிட்வாவினால் பெற்றோரை இழந்த 103 சிறுவர்கள் – கரம் கொடுக்கும் அரசாங்கம்….

டிட்வா சூறாவளியினால், 103 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.குறித்த சிறுவர்களைப் பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பொறுப்பேற்கப் பலர் முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதன்படி, முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சாவித்ரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Read More