“ஒரு முதியவர் இறக்கும் போது, ஒரு நூலகமே எரிந்து சாம்பலாகிறது” என்ற ஆபிரிக்கப் பழமொழியை அடிப்படையாகக் கொண்டு, நைஜீரியக் கலைஞர் மாலிக் அபெக்புவா ஒரு புரட்சிகரமான முயற்சியில் இறங்கியுள்ளார்.செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆபிரிக்காவின் இழந்த வரலாற்றை மீட்டெடுப்பதே இவரது இலக்காகும்.மாலிக் அபெக்புவா தொடங்கியுள்ள ‘லெகசி லிங்க்’ திட்டத்தின் மூலம், ஆபிரிக்க முதியவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், கதைகள் மற்றும் அவர்களின் குடும்பப் பாரம்பரியப் பொருட்கள் (முகமூடிகள், மேளங்கள் போன்றவை) டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்படுகின்றன.இதன் மூலம், முதியவர்களின் ‘டிஜிட்டல் இரட்டையர்கள்’ (Digital Twins) உருவாக்கப்படும், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் முப்பரிமாணக் காட்சி (Hologram) மூலம் அவர்கள் தோன்றுவார்கள்.செயற்கை நுண்ணறிவு உதவியுடன், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த முதியவர்கள் நேரில் பேசுவது போலவே பதிலளிப்பார்கள்.வரலாற்றுச் சிறப்புமிக்க பெனின் நகரம் (Benin City) போன்ற அழிந்துபோன அல்லது சிதைந்துபோன ஆபிரிக்கப் பாரம்பரிய இடங்களை AI மூலம் மீண்டும் உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.இதற்காக வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆய்வுகளை அவர் அடிப்படையாகக் கொள்கிறார். இதன் மூலம் எதிர்கால சந்ததியினர் அந்த இடங்களை மெய்நிகர் தொழில்நுட்பம் (VR) வழியாக நேரில் காண்பது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.ஆபிரிக்காவில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பல மொழிகளை AI சரியாகப் புரிந்துகொள்வதில்லை என்பதால், மனித மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் இந்தத் தரவுகளை அவர் சேமித்து வருகிறார்.2028ஆம் ஆண்டிற்குள் சுமார் 1,000 முதியவர்களைப் பேட்டி கண்டு அவர்களின் நினைவுகளைப் பாதுகாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.”நமது மொழிகள், கலைப்பொருட்கள் மற்றும் சின்னங்களை மீட்டுருவாக்கம் செய்வதே எனது நோக்கம். அப்போதுதான் நீங்கள் அதனை உண்மையாக அனுபவிக்க முடியும்,” என்கிறார் மாலிக்.
செயற்கை நுண்ணறிவு மூலம் முன்னோர்களை உயிர்ப்பிக்கும் கலைஞர்!..
