ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தமை உள்ளூர் மற்றும் அண்டை அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.இந்த சந்திப்பு நேற்று ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய சில நேரங்களிலேயே இந்திய உயர்ஸ்தானிகரின் உடனான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.இந்த சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையே பரிமாறப்பட்ட கருத்துக்கள் அல்லது விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.முன்னதாக, நேற்று உதய கம்மன்பில, ஜி.எல். பீரிஸ், சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ரணிலை சந்தித்து, நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *