அவன்கார்ட் நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.அவன்கார்ட் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என அறிவித்து, அதனை ரத்து செய்யுமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
அவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் தள்ளுபடி: ஆயுதக் களஞ்சியங்களை அகற்றும் வழக்கில் உத்தரவு…
