பிறை தீர்மானங்களை தெளிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரியபள்ளிவாசலில் விசேட மாநாடு நடைபெற்றது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழு என்பன இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரசீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழு தலைவர் ஹிஷாம் ஃபத்தாஹி நிகழ்வில் முன்னிலை வகித்தார்.ஹாபிழ்.எம்.ஜே.எம். சப்ரி கிராஅத் ஓதியதும் நிகழ்வு ஆரம்பமானது. முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஏ அப்ரோஸ் அஹமட், விஷேட உரை நிகழ்த்தினார்.”பிறை பார்ப்பதில் வளிமண்டலத்தின் வகிபாகம்” எனும் தலைப்பில் வளிமண்டலவியல் திணைக்கள உத்தியோகத்தர் Dr. ஏ.எம்.எம். சாலிஹின் உரை இடம்பெற்றிருந்தது. “ஷரீஆ கண்ணோட்டத்தில் சர்வதேசப் பிறை” எனும் தலைப்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுவின் பிரதித் தலைவருமான அல்-ஆலிம் றிழா அல்-மக்தூமி உரையாற்றினார்.”பிற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பிறை தொடர்பான நெறிமுறைகளால் இலங்கையில் ஏற்படும் தாக்கம்” எனும் தலைப்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு செயலாளர் மௌலவி எம்.ஆர். அப்துர் ரஹ்மான் அல் ஹிலாலி உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. “தலைப்பிறை தீர்மானிப்பதில் சாட்சியத்தின் வகிபாகம்” எனும் தலைப்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழுவின் உறுப்பினரும், அல் மஹ்மூதிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் ஆலிம் சி.ஐ.எம். அஸ்மிர் ஹசனி உரையாற்றினார்.”தொடர்ந்தும் பிறை தீர்மானங்களை தெளிவுபடுத்தல்” எனும் தலைப்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழு தலைவரும் மதீனதுல் இல்ம் – அரபிக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான கலீபதுஷ் ஷாதுலி அல் உஸ்தாத் ஆலிம் எம்.பி.எம். ஹிஷாம் ஃபத்தாஹி உரையாற்றினார்.
பிறையை தீர்மானிக்கும் இஸ்லாமிய நெறியியல்கொழும்பு பெரியபள்ளிவாசலில் மாநாடு…
