78ஆவது சுதந்திர தினம் : 9,158 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு….

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 9,158 ஏனைய தரநிலை (Other Ranks) வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் கௌரவத்தை மேம்படுத்தும் வகையிலும், இராணுவத்தினரின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காவல்துறை மற்றும் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *