கொழும்பு மாநகர சபை வரவு, செலவு, வாக்கெடுப்பு நிறை வேற்றம்!!!

BREAKING NEWS.,.. கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 வாக்குகளால் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்டது. கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு வாக்குகளால் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் பதிவாகின. உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Read More

குச்சவெளி பிரதேச சபையின் விஷேட கூட்டம்!!

இன்று குச்சவெளி பிரதேச சபையின் விஷேட கூட்டம் தவிசாளர் A.P.முபாறக் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.. இக்கூட்டத்தில் எதிர்வரும் புதிய ஆண்டின் முன்னெடுப்புக்கள் பற்றி ஆரையப்பட்டது.

Read More

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!!

பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. தோப்பூர் பிரதேச 8 முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (28.12.2025) நடைபெற்றது.இந்நிகழ்வில் கௌரவ பா.ம.உ.இம்றான் மஹ்ரூப் மற்றும் ம பிரதேச சபை உறுப்பினர்களான தாஹிஸ் நௌபர், சகோதரர் முனீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read More

பரீட்சை திணைக்களத்தின் கோரிக்கை

இந்த வருடம் பிற்போடப்பட்டுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது பாடசாலை அதிபர் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார். அனர்த்த நிலைமைகளால் இடம்பெயர்ந்து ஏற்கனவே பரீட்சைக்கு தோற்றிய பாடசாலையில் மீண்டும் தோற்ற முடியாத நிலைமை காணப்படும் பரீட்சார்த்திகள் உரிய காலத்திற்குள் அது குறித்து அறிவித்தால் வேறு பரீட்சை மத்திய…

Read More

தேசிய கிரிக்கெட் தெரிவு குழு உறுப்பினர்கள் தெரிவு

தேசிய கிரிக்கெட் தெரிவு குழு இன்று(16) பெயரிடப்பட்டது. பிரமோத்ய விக்கிரமசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திக டி சேரம், தரங்க பரணவிதான, விநோதன் ஜோன் மற்றும் ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் ஏணைய உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read More

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்

 நாட்டில் முதல் தடவையாக வங்கி அட்டைகள் ஊடாக பஸ் கட்டணம் செலுத்தும் வசதி இன்று(24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தில் சுமார் 20 வழித்தடங்களில் பஸ் கட்டணத்தை வங்கி அட்டைகள் ஊடாக செலுத்த முடியும் என டிஜிட்டல், பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார். மாகும்புரவிலிருந்து காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கும் கொழும்பிலிருந்து அம்பாறைக்கும் கடவத்தையிலிருந்து பொரளைக்கும் மொனராகலையிலிருந்து பிபிலைக்கும் பதுளையிலிருந்து பண்டாரவளைக்கும் பதுளையிலிருந்து மஹியங்கனைக்குமான வழித்தடங்களில் பயணிக்கும் பஸ்களில் இந்த வசதியைப் பயன்படுத்த…

Read More

அமெரிக்காவின் க்ரீன் கார்ட் லொத்தர் இடைநிறுத்தம்

அமெரிக்க க்ரீன் கார்ட் லொத்தர் திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில் இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்களைக் கொலை செய்த சந்தேகநபர் க்ரீன் கார்ட் லொத்தர் மூலமாகவே அமெரிக்காவிற்கு பிரவேசித்துள்ளார். இதனையடுத்தே அமெரிக்க ஜனாதிபதி…

Read More

தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 9 பேர் பலி

Colombo (News 1st) தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியொன்றிற்குள் 2 வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 12 பேரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக அதிகளவான கொலை சம்பங்கள் இடம்பெறும்…

Read More

REBUILDING SRI LANKA நிதியத்திற்கு 4263 மில்லியன் ரூபா நிதி

Colombo (News 1st) REBUILDING SRI LANKA நிதியத்திற்கு இதுவரை 4263 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார். வௌிநாட்டு நாணயங்களில் மாத்திரம் 6 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி இந்த நிதியத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்நாட்டிலுள்ள இலங்கையர்கள், வர்த்தகர்கள், வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள், வர்த்தகர்கள், இராஜதந்திரிகள் ஆகிய தரப்பினரிடம் இருந்து REBUILDING SRI LANKA வேலைத்திட்டத்திற்கு சிறப்பாக ஒத்துழைப்புகிடைப்பதை இது வௌிப்…

Read More