சிலாபம் – குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிங்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (01) பிற்பகல் சிலாபம் நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஆவார். விபத்தில் காயமடைந்த மற்ற சிறுவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி பிங்கிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
வீதியோரம் நடந்து சென்ற சிறுவர்கள் மீது பாரவூர்தி மோதி விபத்து: 13 வயது சிறுவன் பலி…
