வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்.!

வாகன போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு குற்றப் புள்ளிகள் வழங்கும் முறைமை, எதிர்வரும் ஜூலை மாத இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர அறிவித்துள்ளார்.Govpay மூலம் அபராதத் தொகைகளை செலுத்தும் முறைமை நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் நிலையில், அதனுடன் இணையாக இந்த குற்றப் புள்ளி திட்டமும் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.கேகாலையில் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *