வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய முன்னணி உணவகங்கள்…

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய முன்னணி உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.அதன்படி, கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் மற்றும் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள முன்னணி உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *