முல்லைத்தீவில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை…

முல்லைத்தீவில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.இதன்போது, 19 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட பூர்வாங்க விசாரணைகளின் பின்னர், கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரால் குற்றப் பகிர்வுப் பத்திரம் சமர்பிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அம்பாறை கல்முனை பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கல்முனை நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *