பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் AI காணொளியை பதிவிட்டால் இது கட்டாயம் – மீறினால் கடும் நடவடிக்கை…

இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கங்களுக்கான விதிகளை இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அண்மையில் மாற்றியமைத்துள்ளது. இணையப் பயன்பாட்டில் டீப்ஃபேக் மற்றும் ஏனைய முறைகேடுகளைத் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.புதிய விதிகளின்படி, அதிகாரிகளால் சட்டவிரோதம் என அடையாளம் காணப்பட்டு அகற்றக் கோரப்படும் உள்ளடக்கங்களை வெறும் 3 மணிநேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் நீக்க வேண்டும்.இதற்கு முன்னர் இந்த நடவடிக்கைக்கு 36 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கங்களை அகற்ற இந்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.இன்ஸ்டகிராம், டிக்டொக், பேஃஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றப்படும் “செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களை” (Synthetically generated information) தெளிவாக அடையாளப்படுத்துவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த அடையாளங்கள் (Labels) நிரந்தரமானவையாக இருக்க வேண்டும்.இவற்றை எக்காரணம் கொண்டும் மறைக்கவோ அல்லது நீக்கவோ முடியாது.அடையாளக் குறியீடு இன்றி இத்தகைய உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டால், அதற்கு அந்தந்த சமூக ஊடக தளங்களே பொறுப்பேற்க வேண்டும்.2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்களாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின் கீழ், குறிப்பிட்ட சில வகையான செயற்கை உள்ளடக்கங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிகள் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.சுமார் ஒரு பில்லியன் இணையப் பயனாளர்களைக் கொண்ட இந்தியாவில், டீப்ஃபேக், ஆள்மாறாட்டம் மற்றும் போலியான உள்ளடக்கங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடிகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்படுகிறது.அடுத்த வாரம் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரதான உலகளாவிய AI உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *