பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான வருமானத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அதன்படி, தற்போது 1350 ரூபாவாக உள்ள அவர்களின் நாளாந்த ஆகக்குறைந்த வேதனத்தை 1,550 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் எனவும் தொழிலாளர்களின் நாளாந்த வருகையை ஊக்குவிப்பதற்காக மேலதிகமாக 200 ரூபா ஊக்கத்தொகையாக வழங்குவதற்குமான யோசனை முன்மொழியப்பட்டது.இதன் மூலம் தொழிலாளர் ஒருவர் நாளொன்றுக்கு மொத்தமாக 1,750 ரூபா வரை வருமானத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு தொகையை வழங்கும் புதிய நடைமுறைக்கு அனுமதி
