பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இன்று சந்திப்பு..

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.தங்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்பது நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 7 பேர், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலின் ஊடாக தமக்கு நியாயாமான தீர்வை ஜனாதிபதி வழங்குவார் என நம்பிக்கை உள்ளதென, அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *