தரம் 06 பாடத் தொகுதியில் சர்ச்சைக்குறிய Buddy Net இணையத்தை சேர்த்த விவகார விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் திடீர் பதவி விலகல்!!!

Oplus_131072

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட 6 ஆம் தரத்திற்கான பாடத் தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதனை கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப்புலனாய்வவு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://chat.whatsapp.com/CwSWfRoIvoKK4mJJoULzRT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *