ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் திடுக்கிடும் தகவல்

கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, ‘ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த’ எனப்படும் ‘புளூமெண்டல் சங்க’ என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உந்துருளியில் வந்த சந்தேகநபர்கள் டி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சிகையலங்கார நிலையம் ஒன்றை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.உயிரிழந்த இளைஞர் ‘பழனி ரிமோஷன்’ மற்றும் ‘பழனி ஷிரான்’ ஆகியோரின் தரப்பைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி கொழும்பு-12, பசார் வீதியில் கைவிட்டுச் சென்றிருந்த நிலையில், காவல்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.குறித்த உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத் தகடுகள் போலியானவை என்பதும் விசாரணையில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *