சாதாரண தரப் பரீட்சார்த்திகள் கவனத்திற்கு!

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் மழை பெய்யலாம் என்பதால், அபாய நிலையிலுள்ள பாடசாலைகள் குறித்த தகவல்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.மோசமான வானிலை காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.அதன்படி, பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.இந்த நிலையில், நாளை முதல் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதனால், எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு திணைக்களம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *