க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவு – மாணவர் ஒழுக்கத்தைப் பேண விசேட பாதுகாப்பு

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (26) நிறைவடையும் நிலையில், மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் பரீட்சையின் இறுதி நாளில் மாணவர்கள் மத்தியில் மோதல்கள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் இடம்பெற்றமையைச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, இம்முறை அத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.பரீட்சை முடிந்து வீடு திரும்பும் போது மாணவர்கள் எவ்விதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாதிருப்பதை உறுதி செய்யுமாறு பெற்றோர்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *