2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4 இலட்சத்த ஆயிரத்து 787 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை பெப்ரவரி 12 ஆம் திகதி வருகை தந்துள்ளனர்.அதன்படி குறித்த திகதியில் 12 ஆயிரத்து 731 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இந்தியாவிலிருந்து மாத்திரம் 70 ஆயிரத்து 880 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இதேவேளை, பெப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 460 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது….
