இன்று முதல் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழையுடனான வானிலை இன்று (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாகக் குறையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.எதிர்வரும் நாட்களில் ஊவா மாகாணம், மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மாத்தளை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *