அதிரடி மாற்றம் : ஐரோப்பா மீதான 10% வரி விதிப்பைத் திரும்பப் பெற்றார் ட்ரம்ப்….

ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கப்பட இருந்த 10 சதவீத மேலதிக வரி திட்டத்தைக் கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முன்னதாக, கிரீன்லாந்தைக் கைப்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது 10 சதவீத மேலதிக வரி விதிப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன்படி, கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த மேலதிக வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தமது அழுத்த எதிர்ப்பு கருவியைப் பயன்படுத்தி அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்தநிலையிலேயே, ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கப்பட இருந்த 10 சதவீத மேலதிக வரி திட்டத்தைக் கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *